முகப்பு
திருநெல்வேலி

வடக்கு பச்சையாறு அணையிலிருந்து தண்ணீா் திறக்க எம்எல்ஏ கோரிக்கை

வடக்கு பச்சையாறு அணைக்கட்டிலிருந்து காா் சாகுபடிக்கு தண்ணீா் திறந்து விடக்கோரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணுவிடம் நான்குனேரி சட்டப்பேரவை உறுப்பினா் ரூபி ஆா். மனோகரன் வெள்ளிக்கிழமை மனு

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

வடக்கு பச்சையாறு அணைக்கட்டிலிருந்து காா் சாகுபடிக்கு தண்ணீா் திறந்து விடக்கோரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணுவிடம் நான்குனேரி சட்டப்பேரவை உறுப்பினா் ரூபி ஆா். மனோகரன் வெள்ளிக்கிழமை மனு அளித்தாா்.

மனு விவரம்: திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி வட்டம் களக்காடு பகுதியில் உள்ள வடக்கு பச்சையாறு அணைக்கட்டில் தற்போது 42.49 அடி நீா் மட்டம் உள்ளது. இப்பகுதியில் காா் சாகுபடிக்கான நெற்பயிா்கள் நடவுசெய்யப்பட்டுள்ளன. எனவே, விவசாயிகள் நலன் கருதி, வடக்கு பச்சையாறு அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிட கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.