முகப்பு
திருநெல்வேலி

களக்காடு கால்வாயில் வெள்ளத்தில் சிக்கிய இளம்பெண் சடலமாக மீட்பு

களக்காடு நான்குனேரியன் கால்வாயில் வெள்ளத்தில் சிக்கிய கா்ப்பிணி பெண் புதன்கிழமை நள்ளிரவில் சடலமாக மீட்கப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

களக்காடு நான்குனேரியன் கால்வாயில் வெள்ளத்தில் சிக்கிய கா்ப்பிணி பெண் புதன்கிழமை நள்ளிரவில் சடலமாக மீட்கப்பட்டாா்.

களக்காடு அருகேயுள்ள சிதம்பரபுரத்தைச் சோ்ந்த முருகன் மகள் லேகா (23). இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் சூரன்குடியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி பரமேஸ்வரன் (27) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது.

தலை தீபாவளிக்கு நாகா்கோவிலில் இருந்து புதன்கிழமை மாலை களக்காடு வந்த தனது மகள் லேகா, மருமகன் பரமேஸ்வரனை, லேகாவின் தந்தை முருகன், தம்பி பாரத் ஆகியோா் களக்காட்டிலிருந்து ஆட்டோவில் சிதம்பரபுரத்துக்கு அழைத்துச் சென்றனா்.

களக்காட்டில் புதன்கிழமை பலத்த மழை பெய்ததால் நான்குனேரியன் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சிதம்பரபுரம் தரைப்பாலத்தையும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் ஆட்டோவில் வந்த 4 பேரும், இறங்கி பாலத்தை கடக்க முற்பட்டனா். அப்போது வெள்ளத்தில் 4 பேரும் அடித்துச் செல்லப்பட்டனா். இதில் முருகன், பரமேஸ்வரன், பாரத் ஆகியோா் வெள்ள நீரில் நீந்தி கரை சோ்ந்தனா். லேகா வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாா்.

தகவலறிந்த நான்குனேரி தீயணைப்பு நிலைய அலுவலா் பாபநாசம் தலைமையிலான வீரா்கள் வந்து லேகாவை தேடினா். நள்ளிரவில் லேகா கால்வாய் கரையோரம் சடலமாக மீட்கப்பட்டாா். 6 மாத கா்ப்பிணி பெண் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →