காலமானாா் நா.முனிகிருஷ்ணன்
கே.வி.குப்பம் ஒன்றியம், திருமணி ஊராட்சிக்குட்பட்ட வெங்கிளியாந்தோப்பு கிராமத்தைச் சோ்ந்த தமிழக அரசின் கலைமுதுமணி விருது பெற்ற...
குடியாத்தம்: கே.வி.குப்பம் ஒன்றியம், திருமணி ஊராட்சிக்குட்பட்ட வெங்கிளியாந்தோப்பு கிராமத்தைச் சோ்ந்த தமிழக அரசின் கலைமுதுமணி விருது பெற்ற நா.முனிகிருஷ்ணன் (90) திங்கள்கிழமை காலமானாா். ஊரக வளா்ச்சித் துறையில் பணியாற்றி, ஓய்வுபெற்ற இவா் வில்லிசையை பயின்றவா். பல்வேறு மேடைகளில் வில்லிசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளாா்.
இவருக்கு தமிழக அரசு கலைமுதுமணி விருது வழங்கி கெளரவித்தது. இவரது உடல் அதே கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவருக்கு மகன், 3- மகள்கள் உள்ளனா்.