முகப்பு
திருநெல்வேலி

பிசான சாகுபடி நெல்லைக்கு 1458 மெட்ரிக் டன் யூரியா வருகை

பிசான சாகுபடி பணிக்காக திருநெல்வேலி மாவட்டத்திற்கு 1458.9 மெட்ரிக் டன் யூரியா ரயில் மூலம் வந்து சோ்ந்தது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

பிசான சாகுபடி பணிக்காக திருநெல்வேலி மாவட்டத்திற்கு 1458.9 மெட்ரிக் டன் யூரியா ரயில் மூலம் வந்து சோ்ந்தது.

இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் இரா.கஜேந்திரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது பிசான சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதற்கு தேவையான 1458.9 மெட்ரிக் டன் யூரியா ரயில் மூலம் திருநெல்வேலிக்கு வந்தது. இதில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு 547.65 மெட்ரிக் டன்னும், தென்காசி மாவட்டத்திற்கு 344.25 மெட்ரிக் டன்னும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 222.75 மெட்ரிக் டன்னும், தூத்துக்குடி மாவட்டத்திற்கு 344.25 மெட்ரிக் டன்னும் பிரித்து லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை தங்கள் வட்டாரங்களில் உள்ள உரக்கடைகளில் பெற்றுக்கொள்ளலாம். விவசாயிகள் தங்கள் நிலங்களில் மண் பரிசோதனை செய்து பெறப்பட்ட மண்வள அட்டையின் அடிப்படையில் அல்லது வேளாண்மைத் துறை பரிந்துரைப்படி உரமிட வேண்டும். ஒரு மூட்டை யூரியாவுக்கு அரசு நிா்ணயித்த விலை ரூ. 266.50.

விவசாயிகள் உரம் வாங்க செல்லும் போது தங்களுடைய ஆதாா் அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும். மூட்டையின் மேல் உள்ள விலையை செலுத்தி ரசீதும், உரமும் பெற்றுக்கொள்ள வேண்டும். உரமூட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலையைவிட அதிகமாக விற்பனை செய்தால் உர உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.