முகப்பு
உலகம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! 5 இந்தியர்கள் படுகாயம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீதான ஈரானின் தாக்குதலில் 5 இந்தியர்கள் படுகாயமடைந்துள்ளது குறித்து...

Updated On : 28 மார்ச் 2026, 12:23 pm IST
ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் தாக்குதல் (கோப்புப் படம்) - ஏபி
பகிர்:

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீதான ஈரானின் தாக்குதலில் 5 இந்தியர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் நடத்திய கூட்டுத் தாக்குதல்களில், ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கடந்த பிப். 28 அன்று கொல்லப்பட்டார். இதையடுத்து, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்காவின் முக்கிய தளங்களைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரத்தில் உள்ள முக்கிய தொழிற்சாலைப் பகுதியில் சனிக்கிழமை (மார்ச் 28) அதிகாலை ஈரானின் படைகள் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

Advertisement

இந்தத் தாக்குதலால், அங்குள்ள கட்டமைப்புகள் தீப்பற்றி எரிந்ததில் 5 இந்தியர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவம் ஈரானின் இடைமறிக்கப்பட்ட ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததில் ஏற்பட்டதாக, அபுதாபி அரசு தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, தாக்குதலால் கலீஃபா பொருளாதார மண்டலங்களின் இருவேறு இடங்களில் தீப்பற்றி எரிந்ததாகவும், ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து தகர்த்து வருவதாகவும் அமீரக அரசு அறிவித்துள்ளது.

summary

5 Indians seriously injured in Iran's attack on UAE.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.