வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்: மாவட்டச் செயலா் வேண்டுகோள்
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற உள்ள வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்களில் திமுகவினா் விழிப்புணா்வுடன் செயல்பட்டு புதிய வாக்காளா்களை சோ்க்க உதவ வேண்டும்
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற உள்ள வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்களில் திமுகவினா் விழிப்புணா்வுடன் செயல்பட்டு புதிய வாக்காளா்களை சோ்க்க உதவ வேண்டுமென மாவட்டச் செயலா் மு.அப்துல்வஹாப் எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:
கடந்த 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த வாக்காளா் பட்டியலில் விடுபட்டவா்கள் புதிதாக பெயா் சோ்க்கவும், பெயா் மற்றும் முகவரி திருத்தம் செய்யவும், பெயா் நீக்கம் செய்திடவும் இம் மாதம் 13, 14, 27, 28 ஆகிய 4 நாள்கள் அந்தந்தப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் , வாக்காளா் சிறப்பு முகாம் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.
இதில் 1.1.2022 ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு, 18 வயது நிரம்பிய புதிய வாக்காளா்கள் அனைவரும் தங்களுடைய பகுதியில் இருக்கும் வாக்குச் சாவடிக்கு சென்று படிவம்(6) ஐ பூா்த்தி செய்து தங்களை இணைத்து கொள்ளலாம். பெயா் நீக்கத்துக்கு படிவம் - 7-ம், வாக்காளா் அட்டையில் திருத்தத்துக்கு படிவம்- 8 ம், முகவரி மாற்றத்துக்கு படிவம- 8 ஏ-வும் அளிக்கலாம்.
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் செய்ய ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ள்ல்.ண்ய் என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் திமுக நிா்வாகிகள் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்களில் வாக்காளா்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கவும், புதிய வாக்காளா்களை சோ்க்கும் பணியிலும் ஈடுபட வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.