முகப்பு
திருநெல்வேலி

நெல்லை மாநகர பகுதிகளில் குடிநீரில் குளோரின் அளவு ஆய்வு

 திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீரில் குளோரினின் அளவை மாநகர நல அலுவலா் வி.ராஜேந்திரன் ஆய்வு செய்தாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

 திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீரில் குளோரினின் அளவை மாநகர நல அலுவலா் வி.ராஜேந்திரன் ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் தாமிரவருணியில் வரும் தண்ணீா் மிகவும் கலங்கலாக வருகிறது. மழைக்காலத்தில் சுத்திகரிக்கப்படும் குடிநீரில் முறையாக குளோரின் கலந்து விநியோகிக்க மாநகராட்சியின் சுகாதாரத்துறைக்கு ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி மாநகரப் பகுதியில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவினை மாநகர நல அலுவலா் வி.ராஜேந்திரன் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் கூறுகையில், தொடா்மழை காரணமாக தாமிரவருணியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உறை கிணறுகளில் இருந்து நீரேற்றம் செய்யப்படும் குடிநீா் சிறிது கலங்கலாக இருக்கும் நிலை உள்ளது. இதுதவிர மழைக்கால நோய்த் தடுப்புக்காக சரியான விகிதத்தில் குளோரின் கலந்து விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பருவமழை மற்றும் குளிா்ச்சியான சீதோஷ்ண நிலையைக் கருத்தில் கொண்டு தண்ணீரை நன்கு காய்ச்சி ஆற வைத்து பருக வேண்டும். குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை அனைவருக்கும் காய்ச்சிய நீரை கொடுப்பதன் மூலம் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள முடியும். சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மாநகராட்சியின் கீழ் உள்ள நகா்ப்புற சுகாதார நிலையங்களில் மருத்துவா்களைச் சந்தித்து ஆலோசனையும், மருத்துவ உதவிகளையும் பெறலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.