முகப்பு
இந்தியா

ஹோர்முஸ் நீரிணை: எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் 2 கப்பல்கள்!

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து எல்பிஜியுடன் மேலும் 2 கப்பல்கள் இந்தியாவுக்கு வரவிருப்பதாகத் தகவல்

Updated On : 28 மார்ச், 2026 at 6:33 AM
எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக துறைமுகம் வந்த கப்பல் - கோப்புப் படம்
பகிர்:

இந்தியாவுக்கு எல்பிஜி ஏற்றிக் கொண்டு மேலும் 2 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து வரவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து, ஈரானும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது.

இதனிடையே, உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்களிக்கும் ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியது. இதனால், உலகளவில் கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு. சில நாடுகளில் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதனையடுத்து, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளின் கப்பல்களைத் தவிர, மற்ற நாட்டு கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்துள்ளது. மேலும், எல்பிஜி ஏற்றிக் கொண்டு இந்தியாவுக்கும் சில சரக்குக் கப்பல்கள் வந்தடைந்தன.

இருந்தபோதிலும், இந்தியாவிலும் எரிவாயு, பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக வதந்திகள் பரவி வரும்நிலையில், அதனை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து மேலும் 2 சரக்குக் கப்பல்கள் இந்தியாவுக்கு வரவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை விரைவில் இந்தியா வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

summary

Two more merchant vessels carrying petroleum products for India are crossing Strait of Hormuz: Sources

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments