இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு! - ஈரான்
இந்தியா, பாகிஸ்தான் உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என ஈரான் உறுதியளித்துள்ளதைப் பற்றி...
இந்தியா, பாகிஸ்தான் உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என ஈரான் உறுதியளித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டாக இணைந்து கடந்த பிப்.28 ஆம் தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின. அதற்கு பதில் தாக்குதலாக ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது.
25 நாள்களையும் கடந்து போர் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், போரின் ஒரு வியூகமாக உலகளவில் முக்கிய எண்ணெய் வழியான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது. இதனைத் தொடர்ந்து, இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவியது.
Advertisement
Advertisement
இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முடியாமல் சிக்கின. இதனால் இந்தியாவில் மக்களிடையே எரிபொருள் தட்டுப்பாடு குறித்த பெரும் பதற்றம் ஏற்பட்டது.
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் இடையேயான போர் காரணமாக உலக வர்த்தகத்தில் 70 சதவிகிதத்துக்கும் அதிகமான பங்களிப்பை அளித்துவரும் கடல்வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் நிரந்தரமாக மூடியது.
அதனைத் தொடர்ந்து அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும், ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டு அதனை அமெரிக்காவும் ஈரானும் நிர்வகிக்கும் என்றும் தெரிவித்திருந்தார். அவரின் பேச்சை முற்றிலுமாக மறுத்த ஈரான், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மட்டுமே நிர்வகிக்கும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்பட 5 நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணையில் அனுமதி வழங்கப்படும் என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அபாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஈரானின் அரசு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அபாஸ் அராக்சி பேசுகையில், “நீரிணை வழியாகப் பயணிக்கும் கப்பல்களின் நாடுகளைச் சேர்ந்தவர்கள் எங்களை தொடர்பு கொண்டனர். செய்திகளில் பார்த்திருப்பீர்கள்.
இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், இராக் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் நீரிணையைக் கடந்து சென்றன. நாம் ஒரு போர்ச் சூழலில் இருக்கிறோம்.
இந்தப் பகுதியில் போர் சூழ்ந்திருக்கிறது. நமது எதிரிகள் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளின் கப்பல்களை இதன் வழியே செல்ல அனுமதிக்க எந்தக் காரணமும் இல்லை. ஆனால், இது மற்ற நட்பு நாடுகளுக்குத் திறந்தே இருக்கிறது” என்றார்.
Amid the escalating conflict in the Middle East, Iran announced that it would not impose a blockade on vessels belonging to five friendly nations, including India, in the Strait of Hormuz. Other than India, ships from Russia, China, Pakistan, and Iraq have been allowed safe passage through the conflict-torn chokepoint.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.