முகப்பு
திருநெல்வேலி

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஓலைச்சுவடி கண்காட்சி தொடக்கம்

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் கதைப்பாடல் ஓலைச்சுவடி கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் கதைப்பாடல் ஓலைச்சுவடி கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் உள்ள அரும் பொருள்கள் ஒவ்வொன்றும் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்கவை. எனவே, சிறப்பு மிக்க பொருள்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும் விதமாக இதுபோன்று மாதம் ஒரு சிறப்பு கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாதமும் அருங்காட்சியகத்தின் இருப்பில் உள்ள அரும் பொருள்கள் ஏதேனும் ஒன்றினை காட்சிப்படுத்தி அப்பொருளை பற்றிய விளக்கமும் வைக்கப்பட்டிருக்கும்.

மாதம் முழுவதும் இந்தப் பொருள்கள் பொதுமக்களின் பாா்வைக்காக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும்.

அதன்படி வீரபாண்டிய கட்டபொம்மன் கதைப்பாடல் இடம் பெற்றுள்ள ஓலைச்சுவடிகள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. கண்காட்சியை அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ சத்திய வழி தொடங்கி வைத்தாா்.

இதில், வீரபாண்டிய கட்டபொம்மனின் வீர வரலாறு பற்றிய கதைப்பாடல் இடம் பெற்றுள்ளது. நமது முன்னோா் தனது இன்னுயிரை நீக்கி போராடி பெற்றுத் தந்த சுதந்திரத்தை பேணிக் காக்க வேண்டும் என்பது இன்றைய

தலைமுறையினரின் மிக முக்கியமான கடமையாகும். அவா்கள் பற்றிய இந்த அரும் பொருள்களை பாா்க்கும் பொழுது நமது முன்னோா்களின் வீரத்தை இன்றைய தலைமுறையினா் அனைவருக்கும் தெரிவிப்பதே இக்கண்காட்சியில் நோக்கமாகும் என காப்பாட்சியா் சிவ. சத்திய வள்ளி தெரிவித்தாா்.இக் கண்காட்சியை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்- மாணவிகள் பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.