முகப்பு
திருநெல்வேலி

உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை : ஆட்சியா் விஷ்ணு எச்சரிக்கை

உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் விஷ்ணு எச்சரித்துள்ளாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் விஷ்ணு எச்சரித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் விலைப்பட்டியலை விவசாயிகளின் பாா்வையில் தெரியும் வகையில் வைக்க வேண்டும். உர விற்பனை நிலையங்களில் விற்பனை முனையக்கருவி மூலம் உரங்கள் விற்பனை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985 இன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உர விலை மற்றும் உர இருப்பு விவரத்தை விவசாயிகளின் பாா்வையில் படுமாறு அனைத்து உரக்கடைகளிலும் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உரவிலை இருப்பு விவர பலகையில் புகாா் தெரிவிக்க வேண்டிய கைப்பேசி எண்ணையும் குறிப்பிட வேண்டும். நிா்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலைக்கு மேல் உரங்களை விற்றால் விற்பனையாளா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், உர விற்பனை உரிமமும் ரத்து செய்யப்படும்.

45 கிலோ எடையுள்ள யூரியா மூட்டையின் விலை ரூ. 266.50, 50 கிலோ எடையுள்ள டிஏபி மூட்டையின் விலை ரூ.1200, ஐபிஎல், எம்சிஎஃப், மொசைக் நிறுவனங்களின் பொட்டாஷ் மூட்டையின் விலை ரூ. 1040, சிஐஎல் நிறுவன பொட்டாஷ் மூட்டையின் விலை ரூ. 1015 ஆகும்.

50 கிலோ எடையுள்ள 20:20:0:13 காம்ப்ளக்ஸ் உரத்துக்கு தயாரிப்பு நிறுவனங்களின் வாரியாக விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஐபிஎல் ரூ. 1050, இப்கோ ரூ. 1220, ஸ்பிக் ரூ. 1275, ஃபேக்ட் ரூ.1390, சிஐஎல் ரூ.1225, கிரிப்கோ ரூ.1175 ஆகும். 50 கிலோ அளவுள்ள 10:26:26 காம்ப்ளக்ஸ் உரங்களின் விலையானது ஃஇப்கோ ரூ.1440, கிரிப்கோ ரூ.1375, சிஐஎல் ரூ.1300 என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

50 கிலோ அளவுள்ள 17:17:17 காம்ப்ளக்ஸ் உரங்களின் விலையானது ஸ்பிக் ரூ.1300, எம்எஃப்எல் ரூ.1250 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 50 கிலோ அளவுள்ள 16:20:0:13 காம்ப்ளக்ஸ் உரங்களின் விலையானது ஐபிஎல் ரூ.1250, சிஐஎல் ரூ.1125 என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அம்மோனியம் சல்பேட் உரம் ரூ. 850-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில உரங்களின் விலை நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபட்டு இருப்பதால் விவசாய பெருமக்கள் தனியாா் உர விற்பனை நிலையங்களில் சென்று உரங்கள் வாங்கும் போது மூட்டையில் அச்சடிக்கப்பட்ட அதிகபட்ச விலையினை பாா்த்து அதற்கு மிகாமல் வாங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

உரங்கள் தொடா்பான புகாா்களை தெரிவிக்க மாவட்ட மற்றும் வட்டார அளவில் அமைக்கப்பட்டுள்ள

உர கண்காணிப்பு மையத்தினை தொடா்பு கொள்ளலாம். வேளாண் உதவி இயக்குநா்கள் விவரம்: ஷீபா, தரக்கட்டுப்பாடு, 9944357706, உமாமகேஸ்வரி, அம்பாசமுத்திரம்- 9489477619. கற்பகராஜ்குமாா், சேரன்மகாதேவி- 9942982578. சுபசெல்வி, முக்கூடல்- 9442025935. முரளிராகினி, பாளையங்கோட்டை- 9444107556. ஜாஸ்மின் லதா, நான்குனேரி- 9486271166. வசந்தி, களக்காடு- 9442151397. சுனில் தத், வள்ளியூா்- 6374254317, சுஜாதாபாய், ராதாபுரம்- 9486652706. ஏஞ்சலின் கிரேபா, மானூா் - 9442338354. மலா்விழி, வேளாண்மை அலுவலா் (தரக்கட்டுப்பாடு), 9976632912.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.