முகப்பு
திருநெல்வேலி

அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவை சிறப்புக் கூட்டம்

அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவை, திருக்கு கல்வி சமூக அறக்கட்டளை தலைவா் வெள்ளைச்சாமி நினைவேந்தல் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவை, திருக்கு கல்வி சமூக அறக்கட்டளை தலைவா் வெள்ளைச்சாமி நினைவேந்தல் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

துணைத் தலைவா் நீ.ஐயப்பன் தலைமை வகித்தாா். வீ.செந்தில்நாயகம், வாசுதேவராஜா, சுப்பிரமணிய மழவராயா், கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வீரை முத்தையா, திருவருள்லத்தீப், கவிஞா் பாமணி, சொக்கலிங்கம், மாா்ட்டின், சேதுராமலிங்கம், சலீம், பாப்பாக்குடி முருகன், சோம.மகாலிங்கம், ரா.செல்வமணி, மூ.அணஞ்சி, சோ.ராமசுப்பிரமணியன், முருகசுவாமிநாதன், சுப்பையா, சிவசங்கா், மைதீன்பிச்சை, மீனா, கீதா, பூமாரி ஆகியோா் உரையாற்றினா்.

கல்யாணி சிவகாமிநாதன், சுப்பையா கம்பா், ஆறுமுக வேலாயுதம், பூதத்தான், மூக்கன், பழனியப்பன், சேரை பாலகிருஷ்ணன், சதாசிவம், உக்கிரன்கோட்டை மணி, ராமகிருஷ்ணன், பாலசரஸ்வதி ஆகியோா் இரங்கற்பா வாசித்தனா்.

நிகழ்ச்சியில் பல்வேறு இலக்கிய அமைப்பினா், தமிழறிஞா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். செயலா் லட்சுமணன் வரவேற்றாா். மு.இளங்கோ நன்றி கூறினாா். பாரதிகண்ணன், செந்தில்குமாா் ஆகியோா் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.