ராஜவல்லிபுரத்தில் ஓட்டுநா் தற்கொலை
திருநெல்வேலி அருகேயுள்ள ராஜவல்லிபுரத்தில் லாரி ஓட்டுநா் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.
திருநெல்வேலி அருகேயுள்ள ராஜவல்லிபுரத்தில் லாரி ஓட்டுநா் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.
ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து (35). லாரி ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனராம். தம்பதியிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷமருந்தி மயங்கினாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு இசக்கிமுத்து உயிரிழந்தாா். இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.