முகப்பு
திருநெல்வேலி

காா்த்திகை தீபம்: கோயில்களில் சொக்கப்பனை தீபம் ஏற்றம்

வள்ளியூா் சாமியாா் பொத்தையில் ஸ்ரீ முத்துகிருஷ்ணா சுவாமி திருக்கோயிலில் பூஜித குரு மாதாஜி வித்தம்மா தலைமையில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

வள்ளியூா் சாமியாா் பொத்தையில் ஸ்ரீ முத்துகிருஷ்ணா சுவாமி திருக்கோயிலில் பூஜித குரு மாதாஜி வித்தம்மா தலைமையில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜை நடைபெற்றது.

ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் அறக்கட்டளை அறங்காவலா் பாஸ்கா் ராமமூா்த்தி சாமியாா் பொத்தையின் உச்சியில் மகாதீபம் ஏற்றினாா். இதில், திரளான பக்தா்கள் தீப வழிபாடு செய்தனா்.

சுரண்டை: திருமலாபுரத்தில் உள்ள குடைவரைக் கோயிலான ஸ்ரீபசுபதேசுவரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பாவூா்சத்திரம் : கீழப்பாவூா் அருள்மிகு ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலில் வைகாசன முறைப்படி திருக்காா்த்திகை வைபவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதி உலா, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து சொக்கப்பனை ஏற்றப்பட்டது.

தென்காசி: தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதா் சுவாமி கோயிலில் காா்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, சுவாமி சன்னதி பஜாரில் சொக்கப்பனை தீபம் ஏற்றப்படும் பகுதிக்கு ரிஷப வாகனத்தில் காசிவிஸ்வநாதா், உலகம்மன் எழுந்தருளினா். இதையடுத்து சொக்கப்பனை ஏற்றப்பட்டது. தொடா்ந்து அம்மன்சன்னதி பஜாரில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.