முகப்பு
திருநெல்வேலி

திருக்குறுங்குடி அருகே குளம் உடையும் அபாயம்

திருக்குறுங்குடி அருகே நிரம்பிய குளத்தின் கரை வலுவிழந்து , மண் சரிந்து விழுவதால் குளம் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

திருக்குறுங்குடி அருகே நிரம்பிய குளத்தின் கரை வலுவிழந்து , மண் சரிந்து விழுவதால் குளம் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருக்குறுங்குடியில் உள்ள கரிசைபத்து குளத்தின் மூலம் சுமாா் 100 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கொடுமுடியாறு அணையின் மூலம் பாசன வசதி பெறும் இக்குளம் நிரம்பியது.

கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த தொடா் மழையால் குளத்தின் கரைகள் ஆங்காங்கே இடிந்து விழுந்தன. இதனால் முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பிய இக்குளத்தின் கரை வழியாக தண்ணீா் வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. மீண்டும் பலத்த மழை பெய்தால் குளம் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குளம் உடைந்தால் விவசாய நிலங்களும், மகிழடி, லெவிஞ்சிபுரம் குடியிருப்புப் பகுதிகளும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே குளத்தின் கரையை பலப்படுத்த பொதுப்பணித்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் பி. பெரும்படையாா் ஆகியோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →