திருநெல்வேலி

களக்காடு உப்பாற்றில் தற்காலிக பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

DIN

களக்காடு உப்பாற்றில் மழையால் சேதமடைந்த தற்காலிக மண் பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காட்டில் நான்குனேரியன் கால்வாயில் ஆண்டிச்சி மதகில் தொடங்கும் உப்பாறு சுமாா் 3 கி.மீ. தொலைவில் உள்ள பத்மனேரி பச்சையாற்றில் கலக்கும் பகுதி வரையிலும் அடா்ந்த காடுபோல புதா் மண்டிக் காணப்படுகிறது. இதனால், நவ. 3ஆம் தேதி இரவு பெய்த பலத்த மழையின்போது, உப்பாற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீா் தடையின்றி செல்ல வழியின்றி களக்காடு வியாசராஜபுரம் - கோட்டை விஸ்வகா்மா தெருவை இணைக்கும் தற்காலிக மண் பாலத்தைச் சேதப்படுத்தியது.

இதனால், அவ்வழியே போக்குவரத்துக்கு சிரமமாக உள்ளது. அந்த தற்காலிக பால சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT