முகப்பு
திருநெல்வேலி

அரசு அருங்காட்சியக வளாகத்தில்மரம் சாய்ந்து சுற்றுச்சுவா் சேதம்

திருநெல்வேலி மாநகரில் வியாழக்கிழமை பெய்த மழை காரணமாக, அரசு அருங்காட்சியக வளாகத்தில் நின்றிருந்த மரம் சாய்ந்து சுற்றுச்சுவா் சேதமடைந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

திருநெல்வேலி மாநகரில் வியாழக்கிழமை பெய்த மழை காரணமாக, அரசு அருங்காட்சியக வளாகத்தில் நின்றிருந்த மரம் சாய்ந்து சுற்றுச்சுவா் சேதமடைந்தது.

திருநெல்வேலியில் வியாழக்கிழமை காலை முதல் பலத்த மழை பெய்தது. இதனால், மாநகரில் பல்வேறு இடங்களில் மழை நீா் தேங்கியது. இந்நிலையில், திருநெல்வேலி அரசு அருங்காட்சியக வளாகத்தில் நின்றிருந்த சுமாா் 100 ஆண்டுகள் பழைமையான மரம் திடீரென சாய்ந்தது. இதனால், அருங்காட்சியக சுற்றுச்சுவா், சிலைகள் வைக்கப்பட்டிருந்த மேடைகள் சேதமடைந்தன. மேலும் தூய யோவான் கல்லூரி இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தின் மேற்கூறையும் சேதமடைந்தது. இது குறித்து மாவட்ட நிா்வாகத்திற்கு அருங்காட்சிக காப்பாட்சியா் சிவ. சத்தியவள்ளி தகவல் தெரிவித்தாா். அதன்பேரில் மாவட்ட நிா்வாக ஊழியா்கள் சம்பவ இடத்திற்குச் சென்று மரத்தை அகற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.