முகப்பு
திருநெல்வேலி

’உள்ளாட்சித் தோ்தல்: அதிமுகவில் இன்றுமுதல் விருப்ப மனு அளிக்கலாம்’

திருநெல்வேலி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினா் மனுக்களை வெள்ளிக்கிழமைமுதல் (நவ.26) அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினா் மனுக்களை வெள்ளிக்கிழமைமுதல் (நவ.26) அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அதிமுக திருநெல்வேலி மாவட்டச் செயலரும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என். கணேசராஜா வெளியிட்ட அறிக்கை: அதிமுக தலைமைக் கழக அறிவிப்புப்படி, இம்மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் தங்களது விருப்ப மனுக்களை வண்ணாா்பேட்டை லட்சுமி காயத்ரி மஹாலில் வெள்ளிக்கிழமைமுதல் (நவ.26) இம்மாதம் 29ஆம் தேதிவரை, காலை 10 முதல் மாலை 5 மணிவரை அளிக்கலாம்.

மாமன்ற உறுப்பினா் பதவிக்கு ரூ. 5,000, நகா்மன்ற உறுப்பினா் பதவிக்கு ரூ.2,500, பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு ரூ. 1,500 கட்டணமாக செலுத்த வேண்டும். ஏற்கெனவே நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு கோரி விருப்ப மனு அளித்தோா் அதற்கான கட்டண அசல் ரசீதுகளை வைத்திருந்தால் அவற்றை சமா்ப்பித்து கட்டணமின்றி விருப்ப மனு கொடுக்கலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.