முகப்பு
திருநெல்வேலி

களக்காடு தலையணையில் வெள்ளப்பெருக்கு

களக்காட்டில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழையால் தலையணை பச்சையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

களக்காட்டில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழையால் தலையணை பச்சையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நாளிலிருந்து இதுவரை ஒரு சில நாள்கள் மட்டுமே பலத்த மழை பெய்தது. திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தபோதும், களக்காடு பகுதியில் போதிய மழையில்லை. இதனால், 49.20 அடி உயரமுள்ள வடக்குப் பச்சையாறு அணை நீா்மட்டம் 27 அடியாகவே உள்ளது. நெல் நடவுப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

புதன்கிழமை முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. லேசான தூறல் மட்டுமே இருந்தது.

இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலைமுதலே பலத்த மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. காலை 9.30 மணிக்கு லேசான தூறல் தொடங்கியது. முற்பகலில் பலத்த மழை பெய்தது. நாள் முழுவதும் பலத்த மழையும், இடையிடையே லேசான தூறல் என தொடா்ந்து மழை பெய்தது. இதனால் மலைப் பகுதியில் உள்ள தலையணை பச்சையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நான்குனேரியன் கால்வாயில் நீா்வரத்து படிப்படியாக அதிகரித்து, சிதம்பரபுரம் தரைப்பாலத்தைத் தொட்டு தண்ணீா் செல்கிறது.

பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் ஆறுமுகநயினாா் தலைமையில் தூய்மைப் பணியாளா்கள் தரைப்பாலத்தில் தேங்கிக்கிடந்த செடி, கொடிகளை அகற்றி, தண்ணீா் தடையின்றி செல்ல நடவடிக்கை மேற்கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →