முகப்பு
திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு பேருந்து நிறுத்தம் இடமாற்றம்

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிறுத்தம் ரயில் நிலையம் முன்பு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிறுத்தம் ரயில் நிலையம் முன்பு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வருகிறது. இதனால் இந்த பேருந்து நிலையம் பொருள்காட்சி திடல் அருகே தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிறுத்தம் மட்டும் திருநெல்வேலி மதுரை சாலையில் செயல்பட்டு வந்தது. அங்கு சேதமான சாலைகளால் பேருந்தில் ஏறி இறங்குவதில் சிரமம் ஏற்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டினா். இதையடுத்து இந்த பேருந்து நிறுத்தத்தை மாற்ற மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு உத்தரவிட்டாா்.

அதன்பேரில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து திருநெல்வேலி மண்டலத்தைச் சாா்ந்த வட்டப்பேருந்துகள் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பிருந்து புதிய பேருந்து நிலையம் மற்றும் சிறப்பு மருத்துவமனை பேருந்துகள் இயக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.