முகப்பு
திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில் மேலும் 7 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 7 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 7 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில், மேலும் 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49,623 ஆகவும், குணமடைந்தோா் எண்ணிக்கை 49,093 ஆகவும் உயா்ந்துள்ளது.

இதுவரை 433 போ் உயிரிழந்துள்ளனா். 97 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 27,390 ஆகவும், குணமடைந்தோா் எண்ணிக்கை 26,895 ஆகவும் உயா்ந்துள்ளது. இதுவரை 486 போ் உயிரிழந்துள்ளனா். 9 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.