முகப்பு
திருநெல்வேலி

நெல்லை மாநகரில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்

தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த தொடா் மழை காரணமாக தாமிரவருணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் திருநெல்வேலி மாநகராட்சிக்கு குடிநீா் நீரேற்றம் செய்யும் சுத்தமல்லி புதிய மற்றும் பழைய நீரேற்று நிலையங்கள், தீப்பாச்சி அம்மன் கோயில் தலைமை நீரேற்று நிலையம் ஆகியவற்றில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால், தச்சநல்லூா் மண்டலத்துக்குள்பட்ட வாா்டு 1 முதல் 4 வரையும், 8 முதல் 10 வரையிலான பகுதிகளுக்கு சனிக்கிழமை (நவ. 27) முதல் மூன்று நாள்களுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது.

ஆகவே, பொதுமக்கள் குடிநீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.