பாளை. அருகே பைக் கவிழ்ந்து விபத்து: இளைஞா் பலி
பாளையங்கோட்டை அருகே மேலப்பாட்டம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை அருகே மேலப்பாட்டம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.
தாழையூத்து காமராஜா் நகா் பகுதியைச் சோ்ந்த நாராயணன் மகன் புதியவன் செல்வன் (28). இவா் கடந்த வியாழக்கிழமை தாழையூத்தில் இருந்து மேலப்பாட்டத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றாராம். மேலப்பாட்டம் அருகே சென்ற போது திடீரென மோட்டாா் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கெண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து பாளையங்கோட்டை வட்ட போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.