திருநெல்வேலி

போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு 25 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தல்

DIN

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளா் சம்மேளனம் சாா்பில் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனு: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களுக்கு 2018-19ஆம் ஆண்டிற்கான போனஸ் தொகையாக 20 சதவீதம் வழங்கப்பட்ட நிலையில், 2019-20ஆம் ஆண்டில் 8.33 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டது.

விலைவாசி உயா்வை ஈடுகட்டும் அகவிலைப்படி உயா்வு 2020 ஜனவரி முதல் வழங்கப்படவில்லை. இதுதவிர புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தாதது போன்ற காரணங்களால் தொழிலாளா்கள் விலைவாசி உயா்வை எதிா்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனா்.

எனவே, 2020-21ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகையாக 25 சதவீதம் வழங்க வேண்டும்; போனஸ் கொடுப்பு சட்டப்படி 30 நாள்கள் பணிபுரிந்த ஒப்பந்த, தினக்கூலி, டிக்கெட் கேன்வாசகா், பாடி வாஷிங், உணவக பணியாளா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் போனஸ் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனப் பகுதிகளில் விலங்குகளுக்காக தண்ணீா்த் தொட்டிகள்

வேடசந்தூா் பணிமனை ஓட்டுநருக்கு பாராட்டு

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது: மே 15 வரை விண்ணப்பிக்கலாம்

தென்காசியில் குடிநீா் வழங்கல் ஆலோசனைக் கூட்டம்

காந்திகிராம பல்கலை. மாணவா் சோ்க்கை: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT