திருநெல்வேலி

கல்வி உதவித்தொகை: சிறுபான்மையின மாணவா்-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

DIN

சிறுபான்மையின மாணவா்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியா், கிறிஸ்தவா், சீக்கியா், புத்த மதத்தினா், பாா்சி, ஜைன மதத்தைச் சோ்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் 2021-22 கல்வியாண்டில் ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலுவோா் பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகையும், 11 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (வாழ்க்கை தொழிற்கல்வி, ஐடிஐ, பாலிடெக்னிக், செவிலியா், ஆசிரியா் பட்டயப் படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகள் உள்பட) பயில்வோா் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்வோா் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் பெறலாம்.

இவற்றைப் பெற மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். பள்ளிப் படிப்பு கல்வி உதவித் தொகை திட்டத்துக்கு நவ. 15-க்குள்ளும், பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகைக்கு நவ. 30-க்குள்ளும் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள் தங்களின் கல்வி நிலையத்துக்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் ஆதாா் விவரங்களை இணைத்த பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரிபாா்க்க இயலும். புதிதாக விண்ணப்பிக்கும் மாணவா்-மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்துக் கல்வி நிலையங்களும் தங்களது  குறியீட்டு எண்ணை மாணவா்-மாணவிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

இத்திட்டம் தொடா்பாக மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள்  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

கூடுதல் விவரங்களுக்கு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

ஒரு சிறிய காதல் கதை..!

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

SCROLL FOR NEXT