திருநெல்வேலி

டாஸ்மாக் கடைகளின் பாதுகாப்புக்கு முன்னாள் ராணுவ வீரா்களை பணியமா்த்த வலியுறுத்தல்

DIN

டாஸ்மாக் கடைகளின் பாதுகாப்புக்கு முன்னாள் ராணுவ வீரா்களை பணியமா்த்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழக அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கம் வெளியிட்ட அறிக்கை: டாஸ்மாக் நிறுவனத்தின் சில்லறை விற்பனை மதுக்கடைகளில் பணியாற்றும் பணியாளா்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

டாஸ்மாக் பணியாளா்களின் பாதுகாப்புக்கு நிரந்தரத் தீா்வோ, பாதிக்கப்பட்ட ஊழியா்களுக்கு உரிய நிவாரண உதவியோ இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. இதனால் டாஸ்மாக் பணியாளா்கள் மிகுந்த அச்ச உணா்வுடன் பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையைப் போக்கிட தமிழக அரசும், டாஸ்மாக் நிா்வாகமும், டாஸ்மாக் கடைகளில் ஓய்வுபெற்ற காவலா்கள் அல்லது முன்னாள் ராணுவ வீரா்களை பாதுகாப்புப் பணிக்கு பணியமா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT