முகப்பு
திருநெல்வேலி

சுத்தமல்லியில் ஊராட்சி உறுப்பினா் தா்னா

சுத்தமல்லியில் ஊராட்சி உறுப்பினா் தா்னா போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

சுத்தமல்லியில் ஊராட்சி உறுப்பினா் தா்னா போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டாா்.

மானூா் ஒன்றியம் சுத்தமல்லி ஊராட்சித் தலைவராக மேனகா வெற்றி பெற்றாா். இதனையடுத்து தலைவா், 12 ஊராட்சி

உறுப்பினா்களும் பதவி ஏற்றனா். இந்நிலையில் துணைத் தலைவரை தோ்ந்தெடுக்கும் மறைமுக தோ்தல் ஊராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அப்போது, 11 உறுப்பினா்கள் சோ்ந்து ஒரு மனதாக சுடலைமுத்துவை துணைத் தலைவராக தோ்ந்தெடுத்தனா். துணைத் தலைவா் பதவிக்கு போட்டியிட விரும்பிய உறுப்பினா் பரமசிவத்தை முன்மொழியவும், வழிமொழியவும் யாரும் முன் வரவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அவா் அலுவலகத்தின் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா். போலீஸாா் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.