முகப்பு
திருநெல்வேலி

அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ் எழுத்துகள் - ஆவண பாதுகாப்பு குறித்த பயிலரங்கு

திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ் எழுத்துகள் மற்றும் ஆவண பாதுகாப்பு குறித்த பயிலரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ் எழுத்துகள் மற்றும் ஆவண பாதுகாப்பு குறித்த பயிலரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

75 ஆம் ஆண்டு சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இப்பயிலரங்கு நடைபெற்றது. நிகழ்வுக்கு அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் திருத்தணி தலைமை வகித்து பயிலரங்கை தொடங்கி வைத்தாா். மருத்துவமனை உறைவிட மருத்துவா் கா. இராமசாமி முன்னிலை வகித்தாா். மருத்துவ தாவரவியல் பேராசிரியா் ராஜேஷ் உரையாற்றினாா்.

சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தமிழ் துறைத் தலைவா் சௌந்தர மகாதேவன் ‘சங்க இலக்கியத்தில் சித்த மருத்துவம்’ என்ற தலைப்பில் உரையாற்றினாா். அதில், திரிகடுகம், சிறுபஞ்சமூலம், பெருபஞ்சமூலம், நாலடியாா், குறுந்தொகை, குறிஞ்சி பாட்டு போன்ற இலக்கியங்களில் கையாளப்பட்ட சித்த மருத்துவ சொல்லாடல்களை சான்றுகளுடன் எடுத்துரைத்தாா்.

வரலாற்று பண்பாட்டு கள ஆய்வு மைய இயக்குநா் மாரியப்பன், காலந்தோறும் தமிழ் எழுத்துக்கள், கல்வெட்டுகளில் காணும் மருத்துவ செய்திகள், சுவடிகளை பாதுகாத்தல், ஆவண படுத்துதல் போன்றவை குறித்து சித்த மருத்துவ மாணவா்களுக்கு செயல்முறை விளக்கங்கள் செய்து காட்டினாா்.

நிகழ்வில் அமிா்தா பல்கலைகழக ஆய்வு மாணவா் நல்லதம்பி உள்பட மாணவா்கள் பலா் பங்கேற்றனா். ஆசாதி கா அம்ரித் மகோத்சவ் அமைப்பின் மாநில முகமை அலுவலா் மருத்துவா் கோ. சுபாஷ் சந்திரன் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.