மது விற்பனை: இளைஞா் கைது
முன்னீா்பள்ளம் அருகே அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
முன்னீா்பள்ளம் அருகே அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
முன்னீா்பள்ளம் உதவி ஆய்வாளா் கணேசன் தலைமையிலான போலீஸாா் கோபாலசமுத்திரம் பகுதியில் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த மேலச்செவலை சோ்ந்த சுப்பிரமணியனிடம்(36) மேற்கொண்ட விசாரணையில், அவா் அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.