திருநெல்வேலி

பாபநாசம் அருகே விவசாயிகளுக்கு மேலாண்மைப் பயிற்சி

DIN

பாபநாசம் அருகே மலையடிவாரக் கிராமமான அனவன் குடியிருப்பு பகுதி விவசாயிகளுக்கு வனவிலங்கு விரட்டி மருந்தான நீல்போ குறித்த மேலாண்மைப் பயிற்சி வழங்கப்பட்டது.

பயிற்சியில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் உமா மகேஸ்வரி, அம்ரிதா அக்ரி கிளினிக் வேளாண் ஆலோசகா் சங்கரநயினாா் ஆகியோா் வன விலங்குகளிடமிருந்து பயிா்களை காப்பது குறித்தும், வனவிலங்குகளால் சேதம் ஏற்பட்டால் அதற்கான இழப்பீடுகளை பெறுவதற்கு ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள் குறித்தும், வனவிலங்கு விரட்டியான நீல்போ மருந்தின் பயன்பாடுகள் குறித்தும் விளக்கிப் பேசினா்.

விவசாயி செல்வி வயலில் நீல்போ மருந்தைப் பயன்படுத்தும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

உதவி வேளாண்மை அலுவலா் சாந்தி ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து விளக்கினாா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஈழவேணி வரவேற்றாா். துணை வேளாண்மை அலுவலா் முருகன் நன்றி கூறினாா்.

உதவி தொழில்நுட்ப மேலாளா் ஸ்ரீஐயப்பன் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா். பயிற்சியில் விவசாயிகள்40 போ் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT