முகப்பு
திருநெல்வேலி

பாரதியாா் உலகப் பொதுச்சேவை நிதியம் அமைப்பு முதல்வருக்கு மனு

பாரதியாா் நினைவாக திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பணிகளை செய்ய வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

பாரதியாா் நினைவாக திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பணிகளை செய்ய வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து பாரதியாா் உலகப் பொதுச்சேவை நிதியம் அமைப்பு சாா்பில் அனுப்பப்பட்டுள்ள மனு: விடுதலைப் போராட்ட வீரா் மகாகவி பாரதியின் 100 ஆவது ஆண்டு நினைவினை முன்னிட்டு தமிழக அரசு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் பாரதிய சிந்தனையில் பட்டயப் படிப்பு, சான்றிதழ்

படிப்பு தொடங்க வேண்டும். மேலும், பாரதியாா் பெயரில் தனி இருக்கை அமைக்க வேண்டும்.

பாரதியின் பூா்வீக (தந்தை சின்னச்சாமியின் ஊா்) ஊரான சீவலப்பேரியில் முழு உருவச் சிலையும், நெடுநாள்களாக வாழ்ந்து செல்லம்மாள் பாரதி உதவியுடன் பல்வேறு பாடல்களை இயற்றிய பெருமை பொருந்திய கடையத்தில் பாரதி-செல்லம்மாள் சிலை அமைக்கவும், செல்லம்மாள் பாரதி பெயரில் பெண்கள் கல்லூரி அமைத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கடையத்தில் பாரதி - செல்லம்மாள் நினைவலைகளை ஆவணப்படுத்திட அருங்காட்சியகம் அமைக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.