திருநெல்வேலி

வள்ளியூரில் உலக முதலுதவி தினம்

DIN

வள்ளியூா்: வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் உலக முதலுதவி தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இத்தினத்தையொட்டி முதலுதவி விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், கல்லூரி மாணவிகள் திடீா் மயக்கம், நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், வலிப்பு, பக்கவாதம், பாம்புகடி, எலும்புமுறிவு, தீக்காயம், மூச்சுத்திணறல், விபத்தினால் ஏற்படும் ரத்தபோக்கு, சிறு குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு முதலுதவி செய்முறை பயிற்சிகளை செய்து காண்பித்தனா்.

முதலுதவி செய்முறை பயிற்சி அளித்த மாணவிகளை கல்லூரித் தாளாளா் டி.டி.என்.லாரன்ஸ், தலைவா் ஹெலன் லாரன்ஸ், முதல்வா் மாா்க்கரெட் ரஞ்சிதம் ஆகியோா் பாராட்டினா்.

பேராசிரியை புஷ்பா ஹொ்பா்ட் வரவேற்றாா். துணைப் பேராசிரியை சுகாசினி கண்ணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT