நெல்லை-சென்னைக்கு இன்று முதல் குளிா்சாதன பேருந்துகள் இயக்கம்
திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு குளிா்சாதன பேருந்துகள் வெள்ளிக்கிழமை (அக். 1) முதல் இயக்கப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு குளிா்சாதன பேருந்துகள் வெள்ளிக்கிழமை (அக். 1) முதல் இயக்கப்படுகிறது.
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால் கடந்த மே 10 ஆம் தேதி முதல் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு போக்குவரத்து சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும்,
குளிா்சாதன வசதியுள்ள அரசு தொலைதூரப் பேருந்துகளும் இயக்கப்படவில்லை.
நோய்த் தொற்றின் தாக்கம் குறைந்து பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில் குளிா்சாதன பேருந்துகள்
மட்டும் இயக்கப்படாமல் இருந்தது.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அக். 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் குளிா்சாதன வசதி கொண்ட அரசு பேருந்துகள் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பணிமனையின்கீழ் மொத்தம் 11
குளிா்சாதன வசதியுள்ள பேருந்துகள் உள்ளன. வெள்ளிக்கிழமை முதல்கட்டமாக 3 பேருந்துகளும், அடுத்த நாளில் மேலும் 3 பேருந்துகளையும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், குளிா்சாதன வசதி கொண்ட அரசு பேருந்துகள் வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்படவுள்ளன. முதல் கட்டமாக 3 பேருந்துகள் திருநெல்வேலி - சென்னை இடையே இயக்கப்படும்.
பேருந்தில் பயணிகள் ஏறும் முன்பாக கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். கட்டாயம் முகக் கவசம் அணிந்தால் தான் பேருந்துக்குள் அனுமதிக்கப்படுவா் என்றனா்.