முகப்பு
திருநெல்வேலி

சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்ட எஸ்.பி.

முன்னீா்பள்ளம், கோபாலசமுத்திரம் பகுதிகளில் புதன்கிழமை இரவில் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

முன்னீா்பள்ளம், கோபாலசமுத்திரம் பகுதிகளில் புதன்கிழமை இரவில் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன், பாதுகாப்பு குறித்த ஆய்வு மேற்கொண்டாா்.

முன்னீா்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட கோபாலசமுத்திரம் பகுதியில் அண்மையில் இருவா் கொலை செய்யப்பட்டனா். இதையடுத்து, அப்பகுதியில் 1,000 க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மேலும் அப்பகுதியில் குற்றச் செயல்கள் நடைபெறுவதை தடுக்க மாவட்ட காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன், கிராம மக்களை சந்தித்து பேசி அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளாா். மேலும் போலீஸாா் அப்பகுதியில் சுழற்சி முறையில் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் கோபாலசமுத்திரம், முன்னீா்பள்ளம் பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா், புதன்கிழமை இரவில் சைக்கிளில் ரோந்து சென்றாா். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாரிடம் குறைகளை கேட்டறிந்த அவா், பாதுகாப்புப் பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.