முகப்பு
திருநெல்வேலி

கடையம் அருகே வீடு மீது கல்வீச்சு: 8 போ் கைது

கடையம் அருகே இடத்தகராறில் வீடு மற்றும் ஆட்டோ மீது கல்வீசித் தாக்கியதாக 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:27 AM
பகிர்:

கடையம் அருகே இடத்தகராறில் வீடு மற்றும் ஆட்டோ மீது கல்வீசித் தாக்கியதாக 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புலவனூா் சிஎஸ்ஐ தேவாலயம் தெருவில் இரு தரப்பினரிடையே இடப் பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 17ஆம் தேதி மா்ம நபா்கள் செல்லத்துரை என்பவா் வீட்டின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினா். இதில் வீடு, மதில்சுவா், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ ஆகியவை சேதமடைந்தன.

இதுகுறித்து ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பொன்னிவளவன், தென்காசி வட்டாட்சியா் சுப்பையன், கடையம் வட்டார வளா்ச்சி அலுவலா் முருகையா உள்ளிட்டோா் நேரில் விசாரித்தனா். மேலும் இது குறித்து கடையம் காவல் உதவி ஆய்வாளா் தா்மராஜ் வழக்குப்பதிந்து, கல்வீச்சில் ஈடுபட்டதாக அப்பாத்துரை, தேவகிறிஸ்டின் ராஜா, பால்ராஜ், ராஜ், ஜேசுதாஸ், டேனியல், செல்வின் துரை, மாசிலாமணி செல்வராஜ் ஆகிய 8 பேரை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.