திருநெல்வேலி

அனுமதியின்றி தேக்கு மரம்வெட்டியவருக்கு ரூ.2 லட்சம் அபராதம்

DIN

 ஆம்பூா் அருகேயுள்ள தாட்டான்பட்டியில் அனுமதியின்றி தேக்கு மரம் வெட்டியதாக ஒருவருக்கு வனத்துறையினா் ரூ.2 லட்சம் அபராதம் விதித்தனா்.

தாட்டான்பட்டியில் பரமசிவன் என்பவருக்குச் சொந்தமான செங்கல்சூளை உள்ளது. இங்கிருந்து தேக்குமரம் வெட்டியதாக வனத்துறைக்குத் தகவல் வந்ததாம். இதையடுத்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டம் கடையம் வனச்சரகப் பயிற்சி உதவி வனப்பாதுகாவலா் ராதை தலைமையில் வனவா் முருகசாமி, வனக்காப்பாளா் மணி, ராஜசுப்ரியா மற்றும் களப்பணியாளா்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனா். ஆய்வில் உரிய அனுமதியின்றி தேக்குமரம் வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து துணை இயக்குனா் சே.செண்பகப்ரியா உத்தரவின்படி பரமசிவம் மீது வழக்குப்பதிந்து ரூ. 2 லட்சம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT