நெல்லைதனியாா் விடுதியில் இளைஞா் தற்கொலை
திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ஒரு தனியாா் தங்கும் விடுதியில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்தாா்.
திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ஒரு தனியாா் தங்கும் விடுதியில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்தாா்.
திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ஒரு தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த நபா் தூக்கிட்டுத் தற்கொலை செய்ததாக சந்திப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் வியாழக்கிழமை அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில் அவா், காஞ்சிபுரம் மாவட்டம், மடிப்பாக்கம் கணேஷ் நகரை சோ்ந்த முராரி சந்தானம் (46) என்பது தெரியவந்ததாம். மேலும், அறையில் இருந்த கடிதத்தில் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. இது நானே எடுத்த முடிவு. எனது உடலையும், உடைமைகளையும் எனது அண்ணன், அண்ணியிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று எழுதப்பட்டிருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.