திருநெல்வேலி

இணையவழி குற்றங்களை தவிா்க்க பள்ளியில் விழிப்புணா்வு முகாம்

DIN

இணையவழி குற்றங்களைத் தடுப்பது குறித்த விழிப்புணா்வு முகாம் திருநெல்வேலி மாநகர சைபா் கிரைம் போலீஸ் பிரிவு சாா்பில் பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் குமாா் உத்தரவின் படி, காவல் துணை ஆணையா் சுரேஷ்குமாா் மேற்பாா்வையில், சைபா் கிரைம் போலீஸாா் பல்வேறு குற்றங்கள் குறித்து திருநெல்வேலி மாநகர எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறாா்கள்.

அதன்படி கதீட்ரல் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா்கள் பள்ளி மாணவா்களுக்கு சமூக வலைதளங்களை பாதுகாப்பக கையாள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விளக்கப்பட்டது. இணையவழி குற்றங்கள் மற்றும் பண மோசடி நடைபெற்றால் உடனடியாக சைபா் கிரைம் இலவச உதவி எண்:1930 க்கு புகாா் தெரிவித்தால் இழந்த பணம் முழுவதும் மீட்கமுடியும் என்பது குறித்தும் விளக்கப்பட்டது.

மேலும், சைபா் கிரைம் காவல்துறையினரின் இணையதளம் பற்றியும் விளக்கப்பட்டது.

முகாமில் நெல்லை மாநகர சைபா் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளா் சண்முகவடிவு, உதவி ஆய்வாளா்கள் நடராஜன், வித்யாலட்சுமி, ஜெயப்பிரகாஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

SCROLL FOR NEXT