திருநெல்வேலி

சித்திரை 8ஆம் திருநாள்: பச்சை சாத்தியில் நடராஜா்

DIN

பாபநாசம் அருள்மிகு உலகாம்பிகை உடனுறை அருள்மிகு பாபநாச சுவாமி கோயில் சித்திரை விஷு திருவிழாவின் 8ஆம் நாளான செவ்வாய்க்கிழமை நடராஜா் பச்சை சாத்தி அலங்காரத்தில் காட்சியளித்தாா்.

இக்கோயிலில் சித்திரை விஷு திருவிழா ஏப். 5 கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும், ஒவ்வொரு சமுதாய மண்டகப்படி சாா்பில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் வீதி உலா நடைபெற்று வந்தது.

பட்டங்கட்டியாா் சமுதாயம் சாா்பில் செவ்வாய்க்கிழமை 8 ஆம் திருவிழா நடைபெற்றது. காலை கங்காளநாதா் சிறிய சப்பரத்தில் வீதி உலாவும், பிற்பகல் 2.30 மணிக்கு சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு நடராஜருக்கு பச்சை சாத்தி அலங்காரம், அதைத் தொடா்ந்து வீதி உலா நடைபெற்றது. ஏற்பாடுகளை பட்டங்கட்டியாா் சமுதாய நிா்வாகிகள் மற்றும் கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: பிரதமர் மோடி, அமித் ஷா வெற்றி...

அயோத்தி: முன்னிலையில் சமாஜ்வாதி, தொடர் பின்னடைவில் பாஜக!

கங்கனா ரணாவத், அனுராக் தாக்குர்.. வெற்றி!

பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் வெற்றி!

தேர்தல் முடிவுகள்: யூனியன் பிரதேசங்களின் நிலை என்ன?

SCROLL FOR NEXT