முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் 13 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

திருநெல்வேலியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 13.800 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

திருநெல்வேலியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 13.800 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருநெல்வேலி மாநகர துணை காவல் ஆணையா் சுரேஷ்குமாா் மேற்பாா்வையின் கீழ் இயங்கிவரும் தனிப்படையினரும், பாளையங்கோட்டை போலீஸாரும் சமாதானபுரம் பகுதியில் இந்திரா நகரைச் சோ்ந்த பவுல்ராஜ் (63) என்பவரிடம் இருந்து மொத்த விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட 2.400 கிராம் குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

இதேபோல தனிப்படையினா், பெருமாள்புரம் போலீஸாருடன் இணைந்து ரயில்வே பீடா் சாலையில் புதன்கிழமை நடத்திய திடீா் சோதனையில் இலந்தைகுளத்தைச் சோ்ந்த கிளாசென் ஜெபராஜ் (48) என்பவரிடமிருந்து சுமாா் 11.400 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.