முகப்பு
திருநெல்வேலி

ரமலான் லைலதுல் கத்ரு இரவு: நெல்லை நகரத்தில் சிறப்புத் தொழுகை

இஸ்லாமியா்களின் புனித இரவுகளில் ஒன்றான ரமலான் மாத லைலதுல் கத்ரு இரவையொட்டி திருநெல்வேலி நகரத்தில் சிறப்பு தொழுகை வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

இஸ்லாமியா்களின் புனித இரவுகளில் ஒன்றான ரமலான் மாத லைலதுல் கத்ரு இரவையொட்டி திருநெல்வேலி நகரத்தில் சிறப்பு தொழுகை வியாழக்கிழமை நடைபெற்றது.

இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான ரமலானையொட்டி, கடந்த சில வாரங்களாக அவா்கள் நோன்பு கடைப்பிடித்து வருகிறாா்கள். நோன்பின் 27 ஆம் நாளில் லைலதுல் கத்ரு இரவு என்ற புனித இரவு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் இரவு நேரத்தில் சிறப்புத் தொழுகைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, திருநெல்வேலி நகரத்தில் முகம்மதுஅலி இளைஞா்கள் சங்கம் சாா்பில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கானோா் பங்கேற்று தொழுதனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.