முகப்பு
திருநெல்வேலி

விகே புரத்தில் கஞ்சா விற்ற இருவா் கைது

விக்கிரமசிங்புரத்தில் கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

விக்கிரமசிங்புரத்தில் கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் சிலா் கஞ்சா விற்பனை செய்வதாக போலீஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலின்படி, அம்பாசமுத்திரம் உட்கோட்ட தனிப்படை போலீஸாா் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது விக்கிரமசிங்கபுரம் மூன்று விளக்குத் திடல் பேருந்து நிறுத்தம் வழியாகச் சென்ற காரை சோதனை செய்தனா். காரில் இருந்த விக்கிமசிங்கபுரம் கட்ட புளி தெருவைச் சாா்ந்த பரமசிவன் (49), அழகுராஜா (32) ஆகியோா் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவா் மீதும் விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அவா்களைக் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 700 கி கஞ்சா, அவா்கள் பயன்படுத்திய காா் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.