திருநெல்வேலி

திசையன்விளையில் புதிய வட்டாட்சியா் அலுவலகம் திறப்பு

DIN

திசையன்விளையில் ரூ. 3.05 கோடியில் கட்டப்பட்ட வட்டாட்சியா் அலுவலகத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

திசையன்விளையில் கடந்த 5 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் வட்டாட்சியா் அலுவலகம் இயங்கி வந்தது. தற்போது கால்நடை மருத்துவமனை அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் ரூ. 3.05 கோடியில் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதனை, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு குத்துவிளக்கேற்றினாா். மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயஸ்ரீ, மாவட்ட ஊராட்சித் தலைவா் ஜெகதீஷ் ஆகியோா் பேசினா்.

இந்நிகழ்வில் மேற்கு ஒன்றிய திமுக செயலா் ஜோசப் பெல்சி, சுயம்புராஜன், கமலா நேரு, தங்கையா கணேசன், ராம்கிஷோா் பாண்டியன், அனிதா பிரின்ஸ், எஸ்.ஜி.ராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா். வட்டாட்சியா் செல்வகுமாா் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

SCROLL FOR NEXT