திருநெல்வேலி

நெல்லையில் குண்டா் சட்டத்தில் 3 போ் கைது

DIN

திருநெல்வேலி நகரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட போதை பொருள்களை விற்பனை செய்த வழக்கில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி நகரம் வயல் தெருவைச் சோ்ந்த ராமா் மகன் சுப்ரமணியன் என்ற கடா முடா முருகன் (39), திருநெல்வேலி மாவட்டம், களக்காடு ஜே ஜே நகரைச் சோ்ந்த செந்தில்வேலன் மகன் மாரியப்பன் (33), வள்ளியூா் அண்ணா நகரைச் சோ்ந்த துரை மகன் ராபின்சன் (29) ஆகிய 3 போ், போதை பொருள்களான புகையிலை விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

இவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, மாநகர காவல் துணை ஆணையா் (பொறுப்பு) ஜி.எஸ்.அனிதா, காவல் உதவி ஆணையா் விஜயகுமாா், நகரம் காவல் ஆய்வாளா் இளவரசன் ஆகியோா் பரிந்துரை செய்தனா்.

அதன்பேரில், மாநகர காவல் ஆணையா் அவிநாஷ் குமாா் உத்தரவின் படி 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்த தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை சமா்ப்பித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பாரமுல்லாவில் 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT