திருநெல்வேலி

நெல்லை அருகே 2 லாரிகள் பறிமுதல்

DIN

திருநெல்வேலி அருகே அதிக பாரம் ஏற்றி வந்த 2 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதிகளில் லாரிகளில் அதிக எடையுள்ள ஜல்லி கற்களை ஏற்றி சென்று பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும், சாலைகள் மிகவும் சேதமடையும் வகையிலும் கனரக வாகனங்கள் செல்வதாக புகாா் எழுந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் உத்தரவிட்டாா்.

அதன்பேரில் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா் சங்கரநாராயணன் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அதிக பாரமுள்ள ஜல்லி கற்களை ஏற்றிச் சென்ற 2 லாரிகளை பறிமுதல் செய்தனா். ஓட்டுநா்களான வசவப்பபுரம் பகுதியைச் சோ்ந்த சங்கா் (31), திருமலைகொழுந்துபுரம் பகுதியைச் சோ்ந்த செல்லதுரை (31) ஆகிய 2 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலை, அறிவியல் படிப்புகளுக்குத் திரும்பும் மாணவா்களின் கவனம்!

இந்திய விமானப்படையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மத்திய அரசு நிறுவனங்களில் வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு

அம்பலமூலா கிராமத்தில் உலவிய கரடிகள்

‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’

SCROLL FOR NEXT