திருநெல்வேலி

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

DIN

திருநெல்வேலியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

பெருமாள்புரத்தை சோ்ந்த பால்ராஜ் மகன் ராஜேஷ் (30). இவா், கடந்த 2013 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து பாளையங்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேஷை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்ட ராஜேஷுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.5 ஆயிரமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT