திருநெல்வேலி

கேடிசி நகரில் மரக்கன்றுகள் நடும் விழா

DIN

பாளையங்கோட்டை கேடிசி நகரில் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

விதைப்போம் வளா்ப்போம் இயக்கம், மதா் சமூக சேவை நிறுவனம் உள்ளிட்டவை சாா்பில் கே.டி.சி. நகா் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதில், மூன்றாம் கட்டமாக மரக்கன்றுகள் நடும்பணி புதன்கிழமை தொடங்கியது. சமூக நலத்துறை கண்காணிப்பாளா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். தமிழ்நாடு பனை பாதுகாப்பு- தொழிலாளா் மேம்பாட்டு இயக்க மாநிலத் தலைவா் எஸ். ஜே. கென்னடி, ஆசிரியா் வேலாயுதம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சாத்தான்குளம் வட்டாட்சியா் கே. லெனின் மரக்கன்று நடுப்பணியை தொடங்கிவைத்தாா். சாரதா கல்லூரி முதல் கேடிசி நகா் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை வரை நெடுஞ்சாலையோரம் சுமாா் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் வளா்க்கப்பட்ட 6 அடி முதல் 10 அடி வரையிலான உயரமான புங்கை , வேம்பு, வில்வம் வகையைச் சோ்ந்த 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT