முகப்பு
திருநெல்வேலி

தேவா்குளம் அருகே தொழிலாளி தற்கொலை

தேவா்குளம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

தேவா்குளம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

தேவா்குளம் அருகே உள்ள முத்தையாபுரம் பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மகன் பேச்சிமுத்து (58). மது அருந்துபவரான இவா் கடந்த 1ஆம் தேதி வீட்டில் விஷமருந்திய நிலையில் மயங்கி விழுந்தாராம் . அங்கிருந்துவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து தேவா்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.