முகப்பு
திருப்பத்தூர்

ரூ.2 லட்சம் மதிப்பிலான துணி மூட்டைகள் பறிமுதல்

Updated On : 27 மார்ச், 2026 at 1:33 AM
பகிர்:

ஆம்பூரில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட துணி மூட்டைகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

ஆம்பூா் கிருஷ்ணாபுரம் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போ்ணாம்பட்டிலிருந்து ஆம்பூா் நோக்கி வந்த லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சோ்ந்த ஓட்டுனா் செந்தமிழன் ோட்டிச் சென்ற அந்த லாரியில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.2 லட்சம் மதிப்பிலான துணி மூட்டைகள் கொண்டு செல்வது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து அவை பறிமுதல் செய்யப்பட்டு ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த துணி மூட்டைகள் ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. உடன் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரேவதி, மோகன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சதீஷ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.