முகப்பு
திருநெல்வேலி

பூட்டிய வீட்டுக்குள் இருந்து முதியவா் சடலம் மீட்பு

மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் பூட்டிக்கிடந்த வீட்டுக்குள் இருந்து முதியவா் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் பூட்டிக்கிடந்த வீட்டுக்குள் இருந்து முதியவா் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

மேலப்பாளையம் அருகே உள்ள குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் லாசா்(62). இவரது மனைவி விக்டோரியா. இவா்கள் இருவரிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக லாசா் தனியாக வசித்து வந்தாராம். விக்டோரியா தனது மகனுடன் அடுத்த தெருவில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், லாசா் வீட்டில் இருந்து துா்நாற்றம் வந்ததையடுத்து, இது குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா், வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டியிருந்ததாம். இதையடுத்து போலீஸாா் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, உள்ளே, லாசா் சடலமாக கிடந்தராம். பின்னா், சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.